Kanni Tamilmanam Veesuthadi
Adutha Veettu Penn
Hero T.R.Ramachandran
Music Director P.Aadhinarayana Rao
Lyricist Thanjai Ramaiya Dass
Singers P.Suseela
Year 1960
Song Lyrics

கன்னித் தமிழ் மணம் வீசுதடி

காவியத் தென்றலுடன் பேசுதடி

காவிலே பூவிலே காணும் இன்பம் பாராய்

வாழ்வினிலே கொஞ்சிடும் வண்டுகளும்

ஜோராய் அலை மோதுதே நிலை மாறுதே

ஆனந்த சோலை இதுவே (கன்னித்தமிழ்)


சோலைக் குயில் மாலையிலே இன்னிசையும் பாட

நீலமயில் ஆவலுடன் தோகை விரித்தாட

புள்ளிமான்கள் அங்குமிங்கும் துள்ளி துள்ளி ஓட

பொங்கும் கதிரவன் தங்கத் தகிடாய்

பூவாரம் போல் சூட அலை மோதுதே நிலை மாறுதே

ஆனந்த சோலை இதுவே . (கன்னித்தமிழ்)


வட்டம் போடும் சிட்டுகளாய் வானகத்தில் நாமே

பட்டம் போல வேகமாய் பறந்து செல்வோமே

இஷ்டம் போல உல்லாசமாய் ஓடியாடுவோமே

இன்னல் தீர நாம் இன்ப கானம் பாடுவோமே

அலை மோதுதே நிலை மாறுதே

ஆனந்த சோலை இதுவே (கன்னித்தமிழ்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY